Editorial / 2018 நவம்பர் 04 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்ரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேசத்துக்கு உட்பட்ட புத்துவெட்டுவான் மற்றும் ஐயன்கன்குளம் பாடசாலைகளில் கடமையாற்றும் வெளிமாவட்ட ஆசிரியர்கள், உரிய போக்குவரத்து வசதிகளின்மையால், நாளொன்றுக்கு 800 ரூபாவுக்கும் அதிக தொகையை, போக்குவரத்துக்காகச் செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான், பழைய முறிகண்டி, போன்ற இடங்களுக்கான போக்குவரத்து வசதியின்மை மற்றும் வீதிகள் புனரமைக்கப்படாமை போன்ற காரணங்களால், இப்பிரதேசங்களில் வாழும் மக்கள், தமது அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற, பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மேற்படி வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறித்த குறித்த பாடசாலைகளில் தங்கியிருக்கக் கூடிய வசதிகள் இல்லாத நிலையில், தமது சொந்த மாவட்டங்களிலிருந்து, ஓட்டோக்களை வாடகைக்கு அமர்த்தி வந்து, தமது கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது
6 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago