Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - ஆனையிறவு நாவல் கொட்டியான் ஆகிய பிரதேசங்களுக்கான குறுந்தூர போக்குவரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி ஏ-9 வீதியின் திருமுறிகண்டி முதல் ஆறையிறவு வரைக்குமான பகுதிகளுக்கான குறுந்தூர பஸ் சேவை நடத்தப்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரியுள்ளனர்.
அதாவது, திருமுறிகண்டி முதல் பரந்தன் வரைக்குமான குறுந்தூர சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றபோதும், ஆனையிறவு நாவல் கொட்டியான் உமையாள்புரம் வரைக்குமான சேவைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் இந்தப்பிரதேச மக்கள் அன்றாடம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அதாவது ஏ-9 வீதியூடாக வவுனியா யாழ்ப்பாணத்துக்கான பஸ் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் உமையாள்புரம், ஆனையிறவு, தட்டுவன்கொட்டி, நாவல், கொட்டியான் ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் பயணிகளை மேற்படி பஸ்கள் ஏற்றிச்செல்வதில்லை என்றும் தெரிவித்தனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago