2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போசாக்குக்காக உப உணவுகளைப் பயிரிடவும்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், வறுமை காரணமாக போசாக்கு மட்டம் குறைந்திருப்பதன் காரணமாக, விவசாயிகள் உப உணவுப் பயிர்ச் செய்கையில் கூடுதலாக ஈடுபட வேண்டுமென, கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் எஸ்.அற்புதச்சந்திரன் தெரிவித்தார்.

வன்னேரிக்குளம், கண்ணகைபுரம் கிராமங்களில் நடைபெற்ற பயிர்ச் செய்கைக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நெல்லை விட உப உணவுப் பயிர்ச் செய்கை இலாபகரமானதெனவும் கூறினார்.

மாவட்டத்தில், உப உணவுப் பயிர்களின் விலைகள் அதிகமாக உள்ளனவெனவும் உப உணவுப் பயிர்களை கூடுதலாகப் செய்கை மேற்கொள்வதன் மூலம் பெரும் பயனடைய முடியுமெனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .