2025 மே 22, வியாழக்கிழமை

‘போசாக்கை அதிகரிக்க வேண்டும்’

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்துவதற்கு, அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில், போசாக்குக் குறைந்த மாவட்டமாக, கிளிநொச்சி மாவட்டம் காணப்படுவதாகவும் உள்ளூரிலே உற்பத்தி செய்யப்படுகின்ற பால், கடல் உணவுகளை, கிளிநொச்சி மாவட்ட மக்கள் பயன்படுத்துவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், மாதம் ஒன்றுக்கு 1 இலட்சத்து 65 ஆயிரம் லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்த அவர், அதில் அதிகளவான பால், வெளி மாவட்டங்களுக்கு கொண்டுசெல்வதாகவும் கூறினார்.

எனவே, இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற பாலைக் கொண்டு மாவட்டத்தில் பயன்படக்கூடிய வகையிலான திட்டங்களை முன்னெடுக்கவேண்டுமென, அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X