2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘போதைப்பொருள் பாவனைகளால் மாணவர்களுக்கு உள நலம் பாதிப்பு’

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

போதைப்பொருள் பாவனைகளால், கிளிநொச்சி கல்வி வலயத்தில் உள்ள மாணவர்கள் பலர் உள நலம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன் தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்களின் பிரச்சினைகளில் அதிகமானவை வீடுகளில் போதைப்பொருள்களால் ஏற்படுகின்ற பிரச்சினைகளாகவே உள்ளனவெனவும் இது, மாணவர்களின் கற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

வீடுகளில் மகிழ்ச்சியான சூழல் நிலவுகின்ற போதுதான், பாடசாலைகளிலும் மாணவர்கள் மகிழ்ச்சிகரமான கற்றலில் ஈடுபட முடியுமெனத் தெரிவித்த அவர், இது தொடர்பாக அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதற்கு, முதலில், சமூகத்தில் இருந்து போதைப்பொருளை முற்றாக அழிக்க வேண்டுமெனவும், கமலராஜன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .