Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 28 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
போதைவஸ்தை விற்பனை செய்கின்ற முக்கியமான நபர்களாக பாடசாலை மாணவர்களே காணப்படுகின்றனரென, மாவட்ட செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
வவுனியாவில், இன்று, பேதையற்ற தேசம் என்ற நிகழ்வு சமூக சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்த நாட்டை படைத்துக் கொண்டிருகின்ற மிகப் பெரிய யுத்தமாகவே பேதைவஸ்து பிரச்சினையை பார்க்க வேண்டி இருக்கின்றது. நாளுக்கு நாள் போதை பாவனைக்கு உட்படுகின்ற தொகை அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இந்த வகையில், போதைவஸ்தை விற்பனை செய்கின்ற முக்கியமான நபர்களாக பாடசாலை மாணவர்களே காணப்படுகின்றவர்கள். ஆகவே நாங்கள் இவ்வாறான நிகழ்வுகளை பிரதேச ரீதியாகவோ, மாவட்ட ரீதியாகவோ நடத்துவதால் மாத்திரம் போதையற்ற சமூகத்தை உருவாக்கி விட முடியாது.
இது ஒரு நீண்டநாள் நோயாக தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. தற்போது போதைவஸ்து மாபியாக்கள் பாடசாலை மாணவர்களை மையமாக கொண்டு அவர்களை, இந்த துறைக்குள் கொண்டு செல்லலாம் என, பல தந்திரோபாய செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்துகளை அதிகமாக விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த போதைவஸ்துகளை முழு சமூகத்துக்குமே வழங்குகின்ற வலையமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் எமது நாட்டில் யாரும் எதிர்பார்க்காத அளவு போதைப்பொருள் கைப்பற்றுக்கொண்டிருப்பதை பார்க்கும் போது இவர்களுடைய பரந்துபட்ட வலையமைப்பானது உறுதிப்படுத்தப்படுகின்றது.
இதனை நாங்கள் கட்டுப்படுத்துவதற்கு, பல்வேறு வகையான திட்டங்களை மாவட்ட ரீதியாக மேற்கொண்டு வருகின்ற போதிலும், ஒரு வார காலத்துக்குள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது பரந்துபட்ட இந்த பிரச்சினையை தீர்க்கலாமா என்பது சந்தேகமே.
ஆகவே, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு முழு சமூகமே பாடுபட வேண்டிய தேவையிருக்கிறது என்றார்.
2 hours ago
6 hours ago
24 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
24 Sep 2025