Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றி மிக விரைவில் அதன் ஒரு பகுதியை விடுவிப்பதற்;கு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.
கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் வெடிபொருட்கள் அகற்றும்; பணிகள் தற்;போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வெடிபொருட்கள் அகற்றுவதிலுள்ள தாமதம் காரணமாக தற்போது 258க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது மீள்குடியேற்றத்துக்கான பதிவுகளை மேற்கொண்;டுள்ள போதும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக வெளியிடங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வியாழக்கிழமை (13) முகமாலைக்குச் சென்று தற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
'முகமாலைப் பகுதி என்பது மிகவும் வெடிபொருட்கள் ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது. இப்பகுதியில் வெடிபொருட்களை அகற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. நீண்டகாலம் யுத்தம் இடம்பெற்ற பகுதியாக இது காணப்படுவதனால் அதிகளவான வெடிபொருட்கள் உள்ள ஆபத்;தான பகுதியாக காணப்படுகின்றது' என்று தெரிவித்த தன்னார்வத்தொண்டு நிறுவனமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பிரதிநிதி, தற்போது ஒரு பகுதி வெடிபொருட்கள் அகற்றப்பட்டு அதன் பணிகள் நிறைவுபெற்று வருகின்றன என்றும், மிகவிரைவில் மக்கள் மீள்குடியேறுவதற்கு கையளிக்கப்;பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago