2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

மாணவனின் மரணத்துக்கு காரணம் எலிக்காய்ச்சலா?

George   / 2017 மே 11 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

முல்லைத்தீவு, விசுவமடு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவனின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சலே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் எம். சதீஸ்குமார்  என்ற மாணவன்,  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசைப் பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மாணவனின் மரணத்துக்கு  எலிக்காய்ச்சல் ​நோயே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக, மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எலிக்காய்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு  கிளிநொச்சி சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காய்ச்சல், உடம்பு உளைச்சல் அல்லது உடல் நோதல், தலையிடி, உடல் களைப்பு அல்லது உடல் அலுப்பு, கண் சிவத்தல், சத்தி (வாந்தி), கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல் என்பன நோய் அறிகுறிகளாக இருக்கலாம்.

எனினும், சில நோயாளிகளுக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்படாமலும் இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிசை பெறவேண்டும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .