2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாணவர்களின் காலணிகளை நடுவீதியில் குவித்த அதிபரினால் குழப்பம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நி​போஜன்

கிளிநொச்சி பாரதிபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களின் காலணிகளை பாடசாலைக்கு வெளியே பிரதான வீதியின் நடுவில் குவித்த அதிபரின் செயற்பாட்டினால்  பாடசாலையில் நேற்று திங்கட்கிழமை  (17) அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

பாடசாலையின் பெற்றோர்கள் ஒன்று  சேர்ந்து அதிபரின் செயற்பாட்டுக்கு  தங்களின் கடும் எதிர்ப்பினை வெளியிட்ட போது வலயக் கல்வித் திணைக்களம் தலையிட்டமையினால் நிலைமை சுமூகமாகியது.

இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது

நேற்று திங்கட்கிழமை காலை பாடசாலையில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது காலணியை (சப்பாத்து) அணிந்து பாடசாலைக்கு சமூகம் அளிக்காத 15 மேற்பட்ட மாணவஇ மாணவிகளின்  செருப்பு, சப்பாத்து, சாண்டில்ஸ் போன்றவற்றையே  பிரதான வீதியின் நடுவில் பாடசாலை வாசலுக்கு நேராக வீதியில் குவித்துள்ளார் அதிபர்.

இந்தச் செயற்பாடு சில நமிடங்களில் பெற்றோர்கள் மத்தியில் சென்றடைய ஒன்று திரண்ட பெற்றோர்கள் அதிபருக்கு  எதிராக கருத்துக்களை முன்வைத்தனார். கடந்த கால வன்செயல்களால் பாதிக்கப்பட்டு தெற்கில் இருந்து இடம்பெயர்ந்து  தற்போதும் கூலித் தொழிலாளிகளாக வறுமையில் வாழ்ந்து வரும் எங்களை  அதிபரின் செயற்பாடு மிக மோசமாக இழிவுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் பெற்றோர்கள். தாங்கள் மூன்று வேளை நல்ல உணவை  உட்கொள்ளவே தினமும் போராடிவருவதாகவும் இந்த நிலையில் தான் குறிப்பிட்ட சப்பாத்து அணியவில்லை என்ற காரணத்தினால் எங்கள் பிள்ளைகள் அணிந்து வந்து தேய்ந்து போன செருப்புக்களை ஊரே பார்க்கும் வகையில் நடுவீதியில் குவித்தது எங்களை மனதளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் கவலை தெரிவித்தனர்.

பல பாடசாலைகளில் காலணிகள்  வாங்க முடியாத மாணவர்களின் விபரங்களை  பாடசாலை அதிபர்கள் திரட்டி உதவி செய்பவர்களை தேடி அவர்கள் மூலம் சாப்பாத்துக்களை வாங்கிக் கொடுக்கின்றனர் ஆனால் எங்களுடைய அதிபர் எங்களையும், பிள்ளைகளையும் அவமானம்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார்.வீதியில் குவிக்கப்பட்டுள்ள எங்கள் பிள்ளைகளின் செருப்புக்களை பாருங்கள் வறுமை தெளிவாக தெரியும் இது படித்த  அந்த அதிபரின் கண்களுக்கு தெரியவில்லை என்றும் பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் பாடசாலை அதிபரின் கருத்தை பெற தொடர்புகொண்ட போது அவர் கருத்து கூற மறுத்து விட்டார்.

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கரைச்சி கோட்டக் கல்வி அதிகாரி  அமிர்தலிங்கத்தை வினவிய போது பாடசாலை அதிபரின் இந்தச் செயற்பாடு வருத்தமளிக்கிறது என்றும் இந்தச் செயற்பாடு அந்தச் சமூகத்தை பெரிதும் பாதித்திருக்கிறது எனவே பெற்றோர்களின் கோரிக்கை படி தரம் ஒன்று அதிபரை   வலயத்தினால் இடமாற்றம் செய்ய முடியாது.

குறித்த அதிபருக்கும் பெற்றோர்களுக்கும் ஆறு மாதங்களாக கருத்து முரண்பாடுகள் நிலவி வருகிறது. அவருக்கு எதிராக பத்து அமைப்புகள் கோரிக்கை ஒன்றையும் வலயத்திற்கு அனுப்பியுள்ளனர். எனவே வலயமும் இது தொடர்பில் ஒரு மாதத்திற்கு முன் மாகாணத்திற்கு அறிவித்திருக்கிறது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் கோட்டக்கல்வி அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .