2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முதியோர் தின விழா

Gavitha   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண முதியோர் தினவிழா  நேற்று திங்கட்ழைமை (24)  காலை 8 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் முதல் அம்சமாக  காலை 7 மணிக்கு A -09 வீதியின் காக்கா கடைச்சந்திக்கு அருகாமையிலிருந்து முதியோர் விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பமாகி
அதனைத் தொடர்ந்து கூட்டுறவாளர் மண்டபத்தில் மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் . நளாயினி இன்பராஜ் தலைமையில்   நிகழ்வுகள் நடைபெற்றது

இங்கு   வரவேற்பு நடனம் மற்றும் முதியவர்களின் கலை நிகழ்வுகள்  முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றன.குறிப்பாக மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய முதியவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்விற்கு  பிரதான விருந்தினராக வட மாகாண   பதில் முதலமைச்சரும் கல்வி பண்பாட்டலுவல்கள், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய த.குருகுலராசாவும்  சிறப்பு விருந்தினராக  யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனும்,கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதனும், முதலமைச்சரின் செயலாளர் .கே.விஜயலட்சுமியும், இவர்களுடன் 5 மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர்களும் சமூக  சேவைகள் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .