Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
“இறந்து 12 நாட்கள் கடந்தும் எனது கணவரின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை, இன்னும் கிடைக்கவில்லை” என முன்னாள் போராளியின் மனைவி அமலதாஸ் நாகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வின் பின் விடுதலையாகி வவுனியா, புளியங்குளம், பனிக்கநீராவி பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளியான எஸ்.அமலதாஸ் (வயது 46), கடந்த 3ஆம் திகதி திடீரென மயக்கமுற்று விழுந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். அவரது மரணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவரது மனைவி இதனைக் கூறினார்.
“எனது கணவரான அமலதாஸ், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, இடம்பெயர்ந்து அருணாசலம் முகாமில் தஞ்சமடைந்திருந்த போது, இராணுவத்தினரின் அறிவுறுத்தலுக்கு அமைய 2009ஆம் ஆண்டு சரணடைந்தார்.
அதனையடுத்து, அவருக்கு புனர்வாழ்வளித்து கடந்த 2011 ஆம் ஆண்டு, மருதமடு புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலைச் செய்தனர். இதன்போது, தனக்கு ஊசி ஒன்று போடப்பட்டதாகவும் அதனால், 5 வருடத்துக்கு எந்த நோயும் வராது என இராணுவத்தினர் கூறியதாகவும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார். ஊசி போட்டு 5 வருடம் முடிந்த நிலையில் எனது கணவர், திடீரென மரணமடைந்துள்ளார்.
3ஆம் திகதி கூலி வேலைக்குச் சென்றவர், மதியம் வீட்டுக்குச் சாப்பிட வந்த போது திடீரென் மயங்கி விழுந்தார். உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போது, அவர் இறந்து விட்டார் எனக் கூறினார்கள்.
எனது கணவர் கூறிய விடயங்களை வைத்தியசாலையில் நான் தெரிவித்திருந்தேன். அதனால், எனது கணவரின் கண், மூளை, பல், நாக்கு போன்ற உடல் உறுப்புக்களை பரிசோதனைக்கு என்று எடுத்துவிட்டே உடலைத் தந்தார்கள்.
இந்நிலையில், 12 நாட்கள் கழிந்தும் அது தொடர்பான எந்த பதிலும் வரவில்லை. எனது கணவரே குடும்பத்தை கவனித்துக் கொண்டார். தற்போது அவர் இறந்தமையால் 5 பிள்ளைகளுடனும் நான் மிகவும் கஸ்டப்படுகின்றேன். சமுர்த்தி உதவி கூட எமக்கு கிடைக்கவில்லை. வாழ்வாதாரத்துக்காகப் பேரராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago