Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு கரையோரப்பகுதியில் வெளிச்சவீடு ஒன்று இன்மையால் கடற்றொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள மீனவ அமைப்புக்கள், வெளிச்சவீடு ஒன்றினை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று செயலர் பிரிவில் 4,212 வரையான மீனவக் குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன், 5,060 வரையான கடற்றொழிலாளர்கள் கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் வெளிச்சவீடு ஒன்று இன்மையால் கடற்றொழிலாளர்கள் இரவு வேளைகளில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வெளிச்சவீடு ஒன்றை அமைக்குமாறும் மீனவ அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த மாதம் கரைதுரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன்,
முல்லைத்தீவு வெளிச்சவீடு ஒன்று இல்லை. இதனை அமைக்க வேண்டும் இது இல்லாததால் சகல மீனவர்களுக்கும் திசை காட்;டிகளை வழங்க வேண்டியுள்ளது.
அத்துடன், 4 படகு திருத்தும் இடங்களும், 20 இடங்களில் இறங்கு துறைகளும், குளிரூட்டப்படக்கூடிய வசதி கொண்ட குளிரூட்டிகள், 220 வரையான திசை காட்டிகள், மீனவர்களுக்கு துறைமுகம் ஒன்று என்பன அமைக்கப்பட வேண்யுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago