2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 28 பேர் வேட்புமனுத் தாக்கல்

Niroshini   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சண்முகம் தவசீலன்

2017ஆம் ஆண்டுக்கான இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடளாவிய ரீதியில்  எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 07.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை இடம்பெறவுள்ளது. அந்தவகையில், நடைபெறவுள்ள தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல்  இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளிலும் 28 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து தோர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் திரமதி கே.சரோஜா நேற்று(02) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் 05 பேரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் 05 பேரும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் 04 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் 06 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 05 பேரும் மணலாறு பிரதேச செயலக பிரிவில் 03 பேருமாக மொத்தமாக 28 பேர் தேர்தலில் போட்டியிட தகுதிபெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .