Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரம் வரையான குடும்பங்கள், காணிகள் ஆற்ற நிலையில் உள்ளன” என மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தைகிழக்கு, வெலிஓயா ஆகிய ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 42 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 569க்கும் அதிகமானோர் வாழ்ந்து வரும் நிலையில், குறிப்பிட்ட சில குடும்பங்கள், தமக்கான சொந்தக்காணிகள் இல்லாத நிலையில், அவர்களுக்கான வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய உதவித்திட்டங்களை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
“இவர்களுக்கான நிரந்தரக்காணிகளை வழங்குவதற்கு வனஇலாகா மற்றும் அது சார்ந்த திணைங்களங்கள் தாமதங்களையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றன” என பல்வேறு தரப்புக்களாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனிடம் கேட்டபோது, “மாவட்டத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், காணிகளற்ற குடும்பங்களாக காணப்படுகின்றன. இவர்களுக்கு உரிய முறைப்படி காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago