2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் சிறுபோகம் பாதிப்பு

Princiya Dixci   / 2016 மே 19 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு மற்றும் மருதமடுக்குளம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மேற்படி இரு பகுதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கைகளில் கூடுதலானவை வெள்;ளத்தினால் அள்ளுண்டு போயுள்ளதுடன், மற்றையவை பாதிக்கப்பட்டுள்ளன.

அழிவடைந்தமை, பாதிக்கப்பட்டமை தொடர்பில், இரு குளங்களின் கீழான கமக்கார அமைப்புக்கள் மற்றும் கிராமஅலுவலர்கள் ஊடாக தகவல்கள் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என கமநல சேவை நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்;துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X