2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முள்ளிக்குளம் மக்களின் ஆவணங்கள் பரிசீலனை

George   / 2017 மே 10 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடற்படையினரால், கடந்த மாதம் 29 ஆம் திகதி  விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், காணிகளை அடையாளப்படுத்தப்படும் ஆவணங்கள், முள்ளிக்குளம் ஆலய வளாகத்தில்,  செவ்வாய்க்கிழமை(9) காலை பரிசீலனை  செய்யப்பட்டதுடன், பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முள்ளிக்குளம் மக்களின் பூர்வீக நிலங்களில் 100 ஏக்கர் காணிகளை கடற்படையினர் கடந்த மாதம் 29ஆம் திகதி விடுவித்தனர்.

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை, முள்ளிக்குளம் கிராமத்துகு சென்ற முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் தொடர்பான ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் எனவும் காணி தொடர்பாக உள்ள சகல ஆவணங்களையும் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார்.

“100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதும் அதில் 77 ஏக்கர் காணிகளே முசலி பிரதேசச் செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 23 ஏக்கர் காணியை விடுவிக்க 8 மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. 77 ஏக்கர் காணி, ஒரு வார காலத்துக்குள் நில அளவை செய்யப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்படும் ” என, அவர் கூறினார்.

அந்த 23 ஏக்கர் காணியிலே கடற்படையினரின் குடும்பங்கள் 27 வீடுகளில் வசித்து வருகின்றன” என, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .