Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 மே 18 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முள்ளிவாய்காலில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 7 வயது சிறுவன், பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
வவுனியா, பரனாட்டகல் பகுதியிலிருந்து முள்ளிவாய்க்கால் பகுதிக்கு, உறவினர் வீடு ஒன்றில் நடைபெறவிருந்த நிகழ்வுக்கு வந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முயன்ற போது, வீதியில் பயணித்த கெப் ரக வாகனம், சிறுவனை மோதியுள்ளது.
படுகாயமடைந்த சிறுவன், மான்சோலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
பரனாட்டகல், ஓமந்தை, வவுனியாவை சேர்ந்த செந்தில்நாதன் சுதேசியன் (வயது 7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago