2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு

George   / 2017 மே 15 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்றது. பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக வட மாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஈகைச்சுடரை ஏற்றினார்.

இதனையடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் என். சிறிகாந்தா உள்ளிட்ட அக் கட்சியைச் சேர்ந்த பலர், தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த எம். கே. சிவாஜிலிங்கம், “தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுனேயே வாழ முடியும் என்பதனாலேயே நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை செய்து வருகின்றோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .