2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் கோலாகலத் திறப்பு விழா

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம், முல்லைத்தீவு, 3ஆம் வட்டாரம் முள்ளியாவளைப் பிரதேசத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி, மாலை 3.00 மணிக்கு, கனடா - டொரண்டோ நாட்டின் 'துதியின் கூடாரத்தின்' ஸ்தாபகரும், தேவ ஊழியருமான அருட்திரு மனோ தர்மலிங்கத்தினால் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

மிஸ்பா ஜெப மிஷனரின் பிரதான போதகரும், ஸ்தாபகருமான அருட்திரு கலாநிதி ஜெயம் சாரங்கபாணியின் தலைமையில் நிகழும் இப்பெருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக மலேசியா தேவசபையின் வேதாகம கல்லூரி அதிபர் வண போதகர் டேவிட் சந்தியாகு, மட்டக்களப்பு கிழக்கிலங்கை மிஷனரி ஊழியத்தின் ஸ்தாபகரும், தேவ செய்தியாளருமான குகன் ராஜதுரை, திருகோணமலை அன்பின் ஊழியத்தின் சுவிஷேசகர் அம்புருஸ், மன்னார் என் இரட்சகர் ஆலயத்தின் போதகர் அமிர்தலிங்கம் மற்றும் மிஸ்பா ஜெப மிஷனரியின் வட பகுதி ஒருங்கிணைப்பாளர் போதகர் தொமஸ்சிங்க சந்திரகுமார்  ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் முகத்துவார மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம் மேற்கொண்டு வருகின்றது. மேலதிக விவரங்களுக்கு 011- 4612992, உதவிப் போதகர் எஸ்.ஜே.சதீஸ்குமார் (மதன்) 077 2738694 வட பகுதி ஒருங்கிணைப்பாளர் போதகர் தொமசிங் சந்திரகுமார் 0777109364 ஆகியோருடன் தொடர்புகொள்ளுமாறு மிஸ்பா ஜெப மிஷனரி கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .