Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மே 05 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில், அரசுக்கு போதிய அழுத்தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கொடுக்கவில்லை. அதனால்தான் எங்களுடைய போராட்டம் தீர்வின்றி 75 நாளை " என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக, கடந்த 75 நாட்களாக இரவு பகலாக வீதியில் போராடி வருகின்றோம். ஆனால், எங்களது மன உணர்வுகளை புரிந்துகொள்ளாது, மக்கள் பிரதிநிதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
“நல்லாட்சி அரசுக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டாம் மஹிந்த வந்துவிடுவார்” என்றும், “அரசு பதில் தரும்” என்றும், “சர்வதேசம் உதவி செய்யும்” என்றும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நாளைக்கேனும், நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகளுக்காக கொழும்பில் ஒரு கவனயீர்ப்பு நடவடிக்கையை செய்ய முடியாத நிலையிலேயே, எங்களது பிரதிநிதிகள் காணப்படுகின்றனர்.
இணக்க அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர்கள் இன்று சரணாகதி அரசியலில் ஈடுப்பட்டுள்ளனர் என்ற வலுவான சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் ஒரு பேச்சும், கொழும்பில் ஒரு பேச்சும், வெளிநாடுகளில் ஒரு பேச்சும் என அவர்களது செயற்பாடுகள் தொடர்கிறது” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
“நிபந்தனையற்ற ஆதரவை, அரசுக்கு வழங்குவதைவிடுத்து, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் அரசுக்கு உரிய அழுதத்தை வழங்குமாறு, அனைத்து தமிழ் அரசியல்வாதிகளிடமும் 75 ஆம் நாள் கோரிக்கையாக முன்வைக்கின்றோம்” என்றும் அவர்கள் கூறினர்.
15 minute ago
24 minute ago
8 hours ago
08 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
8 hours ago
08 Aug 2025