2025 மே 21, புதன்கிழமை

மகனைத் தேடிய தந்தை உயிரிழப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியாவில், இன்றுடன் (20) 913ஆவது நாள்களாக, தனது 26 வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர், நேற்று (20) அதிகாலை உயிரிழந்துள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தை - மகிழங்குளம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் செல்வராஜா (வயது 56) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (19) இரவு 10 மணியளவில், உயர் குருதி அழுத்தம் காரணமாக‌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி அவர், இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மகனான அச்சுதன் (வயது 26) என்பவர், 2009ஆம் ஆண்டு, ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .