2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மகப்பேற்று மருத்துவதாதி இன்மையால், மகப்பேற்று சிகிச்சை பிரிவு செயலிழப்பு

Gavitha   / 2016 நவம்பர் 02 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ தாதி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகவும் எனினும் அதற்கு பதில் மருத்துவ தாதி இன்னும் நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள பொதுமக்கள், இதனால் வைத்தியசாலையின் மகப்பேற்று சிகிச்சை பிரிவு முற்றாக செயலிழந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த வைத்தியசாலைக்கு கீழுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்களே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் கீழ், 18 கிராமங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் புத்துவெட்டுவான், ஐயங்கன்குளம், அம்பகாமம், புலுமச்சி, நாதகுளம் போன்ற போக்குவரத்து வசதிகள் குறைந்த கிராமங்களிலுள்ள மக்கள், இந்த வைத்தியசாலையையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமங்களிலுள்ள கர்ப்பிணிகள், இந்த வைத்தியசாலையிலேயே தங்களது சிசுக்களை பிரசவித்துள்ள உள்ளனர்.

தற்போது, குறித்த வைத்தியசாலையின் மகப்பேற்று சிகிச்சை பிரிவு செயலிழந்துள்ளமையானது, குறித்த பகுதியிலுள்ள எதிர்கால தாய்மார்களின் உயிரிழப்புக்கு ஏதுவாக அமைந்து விடுமோ என்று பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

எனவே, வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மத்திய சுகாதார அமைச்சு இது தொடர்பில் கவனம் செலுத்தி மகப்பேற்று தாதியொருவரை நியமித்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .