2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மக்களின் எதிர்ப்பால் பணிகள் இடைநிறுத்தம்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - இறம்பைக்குளம் மயானத்துக்கு அருகில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொலைத் தொடர்புக்கோபுரம் (ரவர்) நிர்மாணப் பணிகள், மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வவுனியா - இறம்பைக்குளம் மயானத்திற்கு அருகில், நேற்று முன்தினம் (12) தனியார் நிறுவனம் ஒன்றால், வீதிக்கு அருகில் தொலைத் தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து, குடியிருப்பு, பாடசாலை, கோவில், மயானம் ஆகியவற்றுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் தொலைத் தொடர்புக் கோபுரத்துக்கு டஎதிர்ப்புத் தெரிவித்ததுடன்,  கட்டட ஒப்பந்தப்பணியாளர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

பின்னர் நகரசபையின் கவனத்துக்குக் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டு, தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக, இன்றிலிருந்து (14) நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நகரில் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான கோபுரங்களை அமைத்து எதிர்காலத்தில் அவற்றை தொலைத் தொடர்புக் கோபுரம் போன்று பாவிப்பதற்கு குறித்த நிறுவனம் முயற்சித்துள்ளதாக, மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கோபுரத்தை அமைப்பதற்காக நகரசபையில் அனுமதிக்கான விண்ணப்பம், குறித்த தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள போதும், அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .