2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மண்டைக்கல்லாறு பாலம் புனரமைக்கப்;படவுள்ளது

Kogilavani   / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலம் 800 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்;படவுள்ளது என மாவட்ட செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பூநகரி மன்னார் ஏ-32 வீதியின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று மக்கள் பாவனைக்கு விடப்பட்டபோதும், இதில் காணப்படும் மண்டைக்கல்லாறு பாலம் புனரமைக்கப்படாமல் காணப்படுவதனால் மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்து துண்டிக்கப்;படும். இதனால் படகு போக்குவரத்து மேற்கொள்ளப்படுவது வழமை.

அத்துடன் குறித்த பகுதி மிக மோசமாக சேதமடைந்;து காணப்படுகின்றது. எனவே, இப்பாலததை புனரமைக்குமாறு பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்;த பாலத்தின் கட்டுமானப்பணிகளுக்கு 800 மில்லியன் ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இதற்கான கட்டுமானப்பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மண்டைக்கல்லாறு வழியாக கடல்நீர் உட்புகுந்து வன்னேரிக்குளம் குஞ்சுக்குளம் பகுதிகளில் பயிர்;செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருவதனால் மண்டைக்கல்லாறு பகுதியில் உவர் நீர் தடுப்பு கதவுகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்டச்செயலக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .