2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மண்டைக்கல்லாறு பாலம் புனரமைக்கப்படவுள்ளது

Kogilavani   / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணம் - மன்னார் (ஏ – 32) வீதியில் பூநகரி பகுதியில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு 800 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ – 32 வீதியில் காணப்படும் இந்த பாலம், மழை காலங்களில் முற்றாக பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. மழை காலங்களில் பாலத்தை மேவி வெள்ளம் பாய்வதன் காரணமாக தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்டு, கடற்படையினர் மற்றும் மீனவர்களின் உதவியுடன் படகு சேவை நடத்தப்படும்.

இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் இந்தப் பாலத்தினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. வருடாவருடம் வெள்ளம் பாய்வதால் பாலம் முற்றாக சேதமடைந்துள்ளது.

இதனால் இந்தப் பாலத்தை புனரமைத்துத் தருமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்தனர். இதற்கான கட்டுமானத்துக்கான நிதி மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான நிதி கிடைத்த நிலையில் கட்டமாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, மண்டைக்கல்லாறு வெள்ளம் பாயும் போது, கடல்நீர் உட்புகுந்து வன்னேரிக்குளம், குஞ்சுக்குளம் பகுதிகளில் பயிர்ச் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருவதனால், மண்டைக்கல்லாறு பகுதியில் உவர்நீர் தடுப்பு கதவுகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .