2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மண்டைக்கல்லாற்றில் படகுச் சேவை

George   / 2016 மே 17 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, பூநகரி மண்டைக்கல்லாற்றில் கடற்படையினரின் உதவியுடன் படகுச்சேவை நடைபெற்று வருவதாக பூநகரிப் பிரதேச செயலாளர் சி.ச.கிருஸ்ணேந்திரன் தெரிவித்தார்.

மன்னார் - யாழ்ப்பாணம் (ஏ -32) வீதியில் அமைந்துள்ள இந்த மண்டைக்கல்லாறு வழியாக சுமார் 3 அடிக்கும் மேலாக வெள்ளநீர் பாய்கின்றது. இதனால், இந்தப் பகுதியினூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனையடுத்து, படகுச் சேவை நடத்துமாறு கடற்படையினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய படகுச் சேவையை கடற்படையினர் மேற்கொள்கின்றனர்.

துணுக்காயின் பழையமுறிகண்டி, அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம் ஆகியவற்றின் வான்வெள்ளம் வெளியேறி, வன்னேரிக்குளத்தினை வந்தடைகின்றது.

வன்னேரிக்குளத்தின் வான்வெள்ளம், மண்டைக்கல்லாறு வழியாக ஏ-32 மன்னார்  - பூநகரி வீதியில் மண்டைக்கல்லாறில் பெருக்கெடுத்துப் பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X