2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மணல் கொண்டு செல்லும் லொறிகளால் வீதி சேதம்

George   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பின் இளங்கோபுரம், வள்ளுவர்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுடைய கிராமங்களுக்குள், மணலுடன் நாள்தோறும் டிப்பர்கள் வாகனங்கள் பயணிப்பதால், புதிதாக அமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதி சேதமடைந்து வருவதாக, புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.  

இளங்கோபுரத்திலுள்ள மணல் மையத்திலிருந்து, டிப்பர்கள் மூலம், நாள்தோறும் வெளியிடங்களுக்கு மணல் கொண்டு செல்லப்படுவதால், புதிதாக அமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதி சேதமடைவதுடன், புனரமைக்கப்படாத வீதிகளும் குண்டும் குழியுமாக மாறி வருவதாக, அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், சேறும் சகதியுமான வீதி ஊடாக மக்கள் பயணிக்க முடியாதுள்ளதாகவும் குறிப்பாக, மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும்போது, காலணிகள் மற்றும் சீருடைகளில் சேறு படிந்த நிலையில் செல்லவேண்டியுள்ளதாக, அம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

இந்நிலையில், தமது கிராமத்தின் ஊடாகப் பயணிக்கும் டிப்பர்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதுடன், வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .