நடராசா கிருஸ்ணகுமார் / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஸ்கந்தபுரம் மணியங்குளம், முல்லைத்தீவின் ஆரோக்கியபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில், தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடைபெறுவதாக பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி பாலங்குளத்தின் கீழான வயல் நிலங்கள், ஆற்றுப்படுக்கைகள் அதேபோன்று மணியங்குளத்தின் பின்பகுதியில் தொடரும் மணல் அகழ்வினால் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அக்கராயன் கமநல சேவை நிலையத்துக்குள் உள்ளடங்குகின்ற பாலங்குளம், மணியங்குளத்தின் வயல் நிலங்களில் கடந்த ஏழாண்டுகளுக்கு மேலாக, மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.
அத்துடன் மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற வாகனங்கள் அக்கராயன் காட்டம்மன் கோயில் வழியாக செல்வதன் காரணமாக காட்டம்மன் கோயில் வீதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மேற்படி இரு குளங்களின் கீழான பயிர்ச்செய்கை நிலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் இம்மணல் அகழ்வினைத் தடுப்பதுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago