Niroshini / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அருவியாற்று, பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில், இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதியால், இன்று (12) காலை, இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு தொடுனர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம்.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது, எதிர்வரும் 29ஆம் திகதி, குறித்த பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற நிறுவனத்தினரை மன்னார் நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பாணை விடுத்து, நீதவான் உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
42 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago