2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மணல், கிரவல் அகழ்வுக்கான தடை நீக்கம்

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணல்,கிரவல் அகழ்வுக்காக தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டச் சுற்றுச்சூழல் செயற்குழு கூட்டம், மாவட்டச் செயலக மண்டபத்தில், இன்று (10) நடைபெற்றது.

இதன்போதே, மாவட்டத்தின் மணல்,கிரவல் அகழ்வுக்காக தற்காலிகமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. 

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியை மய்யாகக் கொண்டு, இங்குள்ள மக்கள் மணல் அகழ்வு பணியைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு, புவிசரிதவியல் மற்றும் சுரங்கவியல் பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவினர் வியஜம் மேற்கொண்டு, அவர்கள் சிபாரிசுக்கு அமைய தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் மாத்திரம், அபிவிருத்திக்கு எந்த தடங்கலும் ஏற்படாதவாறு அனுமதிப்பத்திரம் வழங்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .