2025 மே 22, வியாழக்கிழமை

‘மண் அணைகளை அகற்றவும்’

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - தேராவில் பகுதியில் யுத்த காலத்தில் பொதுமக்களின் குடியிருப்புகளை ஊடறுத்த போடப்பட்ட மண் அணைகள் இதுவரை அகற்றப்படாமையால், தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - தேராவில் பகுதியில், 2009ஆம் ஆண்டு யுத்தகாலத்தின் பொதுமக்களின் குடியிருப்பு காணிகளை ஊடறுத்து போடப்பட்ட மண் அணைகள் இதுவரையில் அகற்றப்படாத நிலையில் காணப்படுகின்றது.

மக்கள் மீள்குடியேறி எட்டு ஆண்டுகளாகிய போதும், இதுவரை குறித்த மண் அணைகள் அகற்றப்படாமல் காணப்படுவதாகவும் இதனால் தாங்கள் தங்கள் காணிகளில் பயிர் செயகைகள் எதனையும் மேற்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளதுடன், குறித்த மண் அணைகள் மற்றும் அதில் காணப்படும் கைவிடப்பட்ட காவலரண்கள் என்பவற்றில் வெடிபொருள்கள் காணப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு, விசுவமடு குளத்தின் அணைக்கட்டில் இருந்து உடையார்கட்டு அணைக்கட்டு வரைக்குமான பகுதிகளில் குறித்த பாரிய மண் அணை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள பிரதேச மக்கள், தமது காணிகளை ஊடறுத்துச் செல்லும் மண் அணைகளை அகற்றித் தருமாறு, பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X