Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், மண்ணெண்ணெய் முறைக்கேடாக வாழங்கியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நிலையத்தின் மண்ணெண்ணைய் விநியோக இந்திரத்துக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவமொன்று, மாங்குளத்தில், நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில், மக்களின் விவசாய செய்கைக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயானது, டிப்பர் வாகனங்களுக்கு வழங்கும் எண்ணெய் என புதுக்குடியிருப்பு பிரதேச பை உறுப்பினர் முகுந்தகஜனால் அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் மாங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குச் சென்று, அங்குள்ள மண்ணெண்ணெய் விநியோக இந்திரத்துக்கு சீல் வைத்தனர்.
இதேவேளை, வவுனியா வடக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடான எரிபொருள் விநியோக சேவையிலும் மக்கள் திருப்தியான பயனை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாக, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு.முகுந்தகஜன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
32 minute ago
33 minute ago