2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு கட்டாயச்சிறை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி, பளைப்பகுதியில் சாரதியனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 13,500 ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், ஒரு மாத கால கட்டாயச்சிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தின் முல்லையடி, பளைப்பகுதியில் மது போதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்த பளைப் பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
 
இதேவேளை, கிளிநொச்சி பகுதியில் கப் ரக வாகனம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் எடுத்துச்சென்ற மூவருக்கு 1,75,000 ரூபாய் தண்டப்பணம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .