Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2019 மார்ச் 04 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார் .
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இன்று திருகேதீஸ்வர கோயில் நிர்வாகத்தினருடனும் மாந்தை பங்கு தந்தையிடமும் தனித்தனியாக சம்பவ நிலவரங்களை கேட்டறிந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்கவும் முரண்பட்ட இரு மதத்துகிடையில் ஒரு சந்திப்பை மேற்கொண்டு இதை சுமூகமாக தீர்க்கஅனைவரும் முன்வரவேண்டும்.
இச்சம்பவங்களால் எமது இனத்தில் அரசியல் இலக்குகள் திசை மாறிச் செல்ல நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
வன்முறைகளால் எந்த விதமான ஒரு தீர்வையும் நாம் அடைந்துவிட முடியாது .அனைவரும் பொறுமையாக பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட முன்வரவேண்டும்.
இதைப்பயன்படுத்தி பல தீய சக்திகள் நாசகார வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்வருவார்கள். ஆகவே எமது இனத்தின் முறுகலை சுமுகமாக பேசி அல்லது சட்டத்தை நாடி ஒரு முடிவிற்கு நாம் அனைவரும் வரவேண்டும்.
இது தொடர்பாக இந்து கலாச்சார அமைச்சர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்துகொண்டார்.
தமிழ் மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி இதில் குளிர்காய பல தீய சக்திகள் எமக்குள் ஊடுருவியுள்ளனர்.
ஆகவே அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் மதங்களை மதித்து இன் நேரத்தில் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago