2025 மே 15, வியாழக்கிழமை

மதுபானபொருள்கள் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அனுமதிப்பத்திரமின்றி கொழும்பில் இருந்து மன்னாருக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மதுபான பொருள்கள், நேற்று (12) மாலை மன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, இரு சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி கொழும்பில் இருந்து  மன்னார் முருங்கன் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பின்னர்,  மன்னார் - சௌத்பார்  பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட போதே,  நேற்று மாலை மன்னார் - தள்ளாடி சந்தியில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பாரவூர்தி ஒன்றினுள் முழுமையாக சுற்றி பியர் போத்தல்கள் அடுக்கி  வைத்து, சூட்சுமமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி   750 மில்லி லீற்றர் கொண்ட 660 மதுபான போத்தல்கள் கொண்டு வந்தபோதே, தள்ளாடி சந்தியில் வைத்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், அநுராதபுரத்தைச் சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடையவர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .