Freelancer / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த வேளை, நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி விழுத்தப்பட்டுள்ளார்.
வாக்குமூலங்களின் அடிப்படையில், பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை, புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களை திங்கட்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. R
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago