2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, கடந்த பல மாதங்களாக நடைபெறாது இருந்த வவுனியா மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள், ஓகஸ்ட் 23ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளனவென, அதன் தலைவர் சி.வரதராசா தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்துரைத்த அவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த சில மாதங்களாக மத்தியஸ்த சபையால் முன்னெடுக்கப்பட்ட வந்த பிணக்குகள் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டிருந்தனவென்றார்.

தற்போது சுமூகமான நிலைமை ஏற்பட்டு வரும் நிலையில், மீளவும் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகளை, ஓகஸ்ட் 23ஆம் திகதி முதல் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அவர், அதன் பிரகாரம், 23ஆம் திகதி காலை 09 மணிக்கு, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் மத்தியஸ்த சபை கூடவுள்ளதாகவும் கூறினார்.

இதன்போது, நீதிமன்றப் பிணக்குகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமெனவும், வரதராசா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .