2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மன்னார் பேசாலை பொலிஸாரினால் சிங்கள மொழி பயிற்சி வகுப்பு ஆரம்பம்

Princiya Dixci   / 2016 மே 25 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் சிங்கள மொழிப் பயிற்சி வகுப்பு, முதற் தடவையாக மன்னார் பேசாலை சென் மேரீஸ் மகா வித்தியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பேசாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்சிலி கேரத் அவர்களினால் பேசாலை கிராமத்தின் சிங்கள மொழி அறிவை அபிவிரித்தி செய்யும் நோக்குடன் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறித்த குறித்த சிங்கள மொழிப் பயிற்சி வகுப்பினை வைபவ ரீதியாக ஆராம்பித்து வைத்தார்.

பேசாலை பொலிஸ் நிலையம், கடந்த சில மாதத்துக்கு முன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் முதல் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கிங்சிலி கேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கள மொழிப் பயிற்சி வகுப்புக்கள் குறித்த பாடசாலையில் 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் ஆண்டுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் வெவ்வேறு நேரங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் செபஸ்ரியான் ராயேஸ்வரன் பச்சேக், பேசாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்சிலி கேரத் உட்பட பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X