2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் ஆதினம் உருவாக்க நடவடிக்கை

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.திருச்செந்தூரன்

கார்த்திகை விளக்கேற்றும் நாளில், மன்னாரில் புதிய ஆதினம் உருவாக்கப்பட உள்ளதாக, யாழ். ஊடக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'மன்னார் மாவட்டத்தில் இந்துக்களை இல்லாது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. மன அமைதிக்காக நாம் ஆலயங்களுக்குச் செல்கிறோம். ஆனால், மன்னார் திருக்கேதீச்சரத்துக்கு நிம்மதியாகச் சென்று வழிபட முடியவில்லை.  

இந்துக் கோயில்களுக்கு அருகில், புத்தர் சிலைகளும், கிறிஸ்தவர்களின் வழிபாட்டிடங்களும் ஆக்கிரமித்துள்ளன. இவ்வாறு நலிவுற்றிருக்கும் சைவத்தை நிலைகொள்ளச் செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வரும் பிரதிநிதிகள், ஆயர்களைத்தான் சந்திக்கிறார்கள். அவர்கள் எங்களது பிரச்சினைகளை தெரியப்படுத்துவார்களா என்பது ஐயமே. எனவே, எங்களுக்கு பலமான அமைப்பு தேவை. இதனைக் கருத்திற்கொண்டே மன்னாரில் சுந்தரர் ஆதினம், கார்த்திகை விளக்கேற்றும் தினமான டிசெம்பர் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக, இந்துக்களை வளர்தெடுக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் 'தொண்டர் தொழு பாலாவி' ஆக இருந்த மன்னார் மற்றும் திருக்கேதீச்சரம் எமது கரங்களில் இருந்து நழுவாமல் இருக்க தொடர்ந்தும் பணியாற்றுவோம்'  என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .