2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மனித உரிமைகள் நாள் இன்று; கவனயீர்ப்பில் உறவுகள்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

சர்வதேச மனித உரிமைகள் நாள் இன்றாகும். இதனையொட்டி, வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால், இன்று (10) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கவுள்ளன. 

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமும், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை, இன்று முன்னெடுக்கவுள்ளது. 

முல்லைத்தீவு நகரில் 1,373ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களுக்கு நீதி கோரி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .