Editorial / 2018 ஜூன் 25 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளின் போது, இதுவரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, விசேட சட்ட வைத்திய நிபுணர் டப்ளியூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேற்படி அகழ்வுப் பணிகள், இன்று (25) 20ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, காலை 11 மணியளவில், ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது ஊடகவியலாளர்கள், விசேட சட்ட வைத்திய நிபுணர் டப்ள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதையடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .