Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 மார்ச் 27 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னாரில் இருந்து குருநாகல் பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் மன்னார் முருங்கன் பகுதியில் வைத்து புதன்கிழமை (26) இரவு கைப்பற்றப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூடைகளை ஏற்றிச் மன்னாரில் இருந்து குருநாகலுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னார் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து முருங்கன் பகுதியில் குறித்த வாகனம் புதன்கிழமை (27) இரவு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த வாகனத்தில் 36 பீடி இலை மூடைகள் பொதி செய்யப்பட்டு இருந்தது. அந்த மூடைகளில் ஆயிரத்து ,115 கிலோ கிராம் கொண்டு செல்லப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.
இதன் போது குறித்த வாகனத்தில் பயணம் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக மன்னார் பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னாரில் இருந்து குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட இருந்ததாக தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 மற்றும் 29 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், லாரியுடன் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைக்காக முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
57 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
57 minute ago
59 minute ago