Niroshini / 2021 மே 31 , பி.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், இன்றைய தினம் (31) மன்னார் நகர் பகுதியில் மக்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக இன்றைய தினம் காலை தொடக்கம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நகர் பகுதிகளை நோக்கி வருகை தந்துள்ளனர்.
அதேநேரம், இன்றைய தினம் வங்கி நிதி நிறுவன நடவடிக்கைகளும் இடம்பெறுகின்ற நிலையில், மக்களின் நடமாட்டம் தொடர்சியாக அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
பொலிஸார், இரானுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும், மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே காணப்படுகின்றது.
அதேநேரம், இன்றைய தினம் காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், சதொச மற்றும் 'காகில்ஸ் புட்சிட்டி போன்ற விற்பனை நிலையங்களில் உணவு பொருட்களின் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்ததுடன், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் குறித்தும் குறித்த நிறுவன அதிகாரிகளை தொலைபேசி மூலம் அழைத்து, பொருட்களை வீடுகளில் இருந்தே பாதுகாப்பான முறையில் பெற்று கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago
14 Nov 2025