2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

மன்னாரில் இரத்த தான முகாம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2017 ஜூன் 20 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும், கறிற்றாஸ் வாழ்வுதய பணியகத்தின் உதவிக்கரம் பிரிவின் ஏற்பாட்டில், எதிர்வரும் நாளை வியாழக்கிழமை, மன்னாரில் இரத்ததான முகாம் இடம்பெறவுள்ளதாக, மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குநர் அருட்பணி ம.ஜெயபாலன் அடிகளார் தெரிவித்தார்.

இதற்கமைய, வியாழக்கிழமை (22) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, மன்னார் வயல் வீதியில் அமைந்துள்ள உதவிக்கரம் நிலையத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, இரத்ததானம் செய்ய முன்வரும் ஆண், பெண் இருபாலாரும், இந்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்துகொள்ள முடியும் என, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .