2025 மே 07, புதன்கிழமை

மன்னாரில் உப்புக்கு தட்டுப்பாடு இல்லை

Niroshini   / 2021 ஜூன் 03 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்படலாமென்று  வெளியாகிய செய்தியைத் தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில், இன்று (03) காலை, கறி உப்பைக் கொள்வனவு செய்ய மக்கள் முந்தியடித்துக் கொண்டனர்.

எனினும், மக்களுக்குத் தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பிராந்தியத்தில், தீப்பிடித்த எக்ஸ்பிரள் பேர்ல்  கப்பலில் உள்ள இராசாயனங்கள்  கடலில் கலந்துள்ளமையால், நாட்டில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படலாம் என செய்திகள் வெளியுள்ளது.

இந்த நிலையில், மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில், இன்று காலை முதல் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பு பெக்கற்றுகளைக்  கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடித்ததோடு, தமக்கு தேவையான உப்பு பெக்கற்றுகளையும் கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.

எனினும், மன்னார் மாவட்ட மக்களுக்குத் தேவையான உப்பு போதியளவு உள்ளதாகவும் மக்கள் இவ்வாறு முன்டியடித்தக் கொண்டு உப்பை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது அதிகளவு உப்பு கையிறுப்பில் உள்ளதோடு, பெறும் போக உப்பு உற்பத்தியும் தற்போது இடம்பெற்று வருவதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X