2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் ஊடக சந்திப்பு நடத்தியவர்களிடம் வாக்குமூலம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னரில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட 4 பேரிடம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், இன்று (01) காலை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர்  வி.எஸ்.சிவகரன், மன்னார் நகர மேயர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன், சட்டத்தரணி அன்ரடனி றொமோல்சன் மற்றும் பிரேம் குமார் ஆகியோரிடமே குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தின நினைவேந்தல்களை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றத்தினூடாக மன்னார் பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 25ஆம் திகதி மேற்படிக் குழுவினரினால் விசேட ஊடக சந்திப்பு நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மேற்படி நால்வரும் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

குறிப்பாக, அன்றைய தினம் வீடுகளில் விளக்கேற்றுங்கள் எனத் தெரிவித்த கருத்து தொடர்பாகவும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரின் பணிப்புரைக்கு அமைவாக, மன்னார் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X