2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மன்னாரில் கரையொதுங்கும் ’எக்ஸ்ப்ரஸ் பேர்ல்’இன் பொருள்கள்

Niroshini   / 2021 ஜூன் 10 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீபற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள், இன்று (10) காலை, மன்னார் -வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியிருந்தன என, வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்காலை பொலிஸ் நிலைத்துக்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே, மேற்படி சிறிய பிளாஸ்டிக் உருண்டைகள் என சந்தேகிக்கப்படும் பொருள்கள் கரை ஒதுங்கியுள்ளன என, மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதறிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் நேரடியாக சென்று,  கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும்,  அரிப்பு பகுதியிலும் குறித்த பிளாஸ்டிக் பொருள்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X