2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரில் களையிழந்தது தீபாவளி

Niroshini   / 2021 நவம்பர் 04 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
 

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், மன்னார் மாவட்டத்தில், தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

குறிப்பாக, பொருள்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், பொருள்களின் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

மேலும், தொடர்ச்சியாக மன்னாரில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையால், இம்முறை தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களில், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

அதேநேரம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் சிறிய அளவிலான விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் குறைந்த அளவிலேயே கோவில்களுக்குச்  சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .