2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மன்னாரில் செயலமர்வு

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாவட்ட ரீதியில் தோற்றம் பெறும் முரண்பாடுகள் மக்கள் மத்தியில் வன்முறையாக மாற்றம் அடையாமல் மக்கள் மத்தியில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தொடர்பாடலுக்கான பயிற்சி மய்யத்தின் ஏற்பாட்டில், அதன் மாவட்ட இணைப்பாளர் ஜோன்சன் தலைமையில், இன்று (28) விசேட செயலமர்வொன்று நடைபெற்றது.

இந்தச் செயலமர்வு, மன்னார்  கிராம அபிவிருத்தி நிறுவன மண்டபத்தில், இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.

இதன்போது, கிராம மட்டத்தில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் தொடர்பாகவும் அவற்றை நல்லிணக்க அடிப்படையில் சமரசம் செய்து கொள்வது தொடர்பாகவும் விரிவுரையாளர் பெனிக்னஸால் விரிவுரைகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .