2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மன்னாரில் திருவள்ளுவர் விழா

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (16) காலை 9.30க்கு, திருவள்ளுவர் விழா நடைபெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினராக வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப் பட்டு, மாவட்டச் செயலக பிரதான வீதியூடாக திருவள்ளுவர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருக்குறள் நடனம், சிறப்பு சொற்பொழிவு, குறள் வழி நாடகம், திருவள்ளுவர் புகழ் பாடும் கோலாட்டம் மற்றும் சிறப்புக் கவியரங்கம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .